கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று இடம் பெற்றது!


-நிதான்-

இரு மாதங்களின் பின்னர் எடுக்கப்பட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக வழக்கு இன்று கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடம் பெற்றது.

வழக்காளி தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் சமர்ப்பணங்களை முன்வைத்தார். வழக்கின் தொடர்ச்சி எதிர்வரும் 03.10.2023 அன்றும் 06.10.2023ஆகிய திகதிகளில் இடப்பட்டு இருக்கின்றது.

ஜனவரி மாதம் இடப்பட்ட வழக்கின் நிலையை சுட்டிக்காட்டி இருந்ததை அடுத்து ஒத்திவைக்க கேட்டும் அனுமதிக்கப்படாமல் நேரம் கழித்து எடுக்கப்பட்டது.

வழக்காளி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் அவர்கள் ஆரம்பத்திலே இடை மனுதாரர்கள் எந்த ஆட்சேபனையை வைக்க போகின்றார்கள் என்பதனை சுட்டிக் காட்டியே தனது சமர்பணங்களை ஆரம்பித்து வைத்ததோடு வடக்கு பிரதேச செயலக அங்கீகரிக்கப்பட்ட நிலை மற்றும் இல்லாதொழிக்கும் செயல்பாடு ஆகியவற்றை விபரித்து நிறைவுறுத்தினார்.

எதிர் தரப்பினர் மற்றும் இடைமனுதாரர்கள் தொடர்பிலான சமர்ப்பணம் மற்றும் வாதங்கள் மேற்குறித்த திகதிகளில் நடைபெறவுள்ளது.