இனவாதநாட்டின் சிங்கள குண்டர்களின் அயோக்கியத்தனம்..!

1956,,ல் எப்படி இருந்ததோ..!
2023,லும் அப்படியே உள்ளது என்பதை தியாகி திலீபனின் நினைவு ஊர்த்தியையும். அதை கொண்டு சென்ற கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினரையும் தாக்கிய சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

1)அக்கரைப்பற்றில் நேற்று முன்தினம் (15/09/2023) இஷ்லாமிய கும்பல்களால் காட்டப்பட்ட எதிர்ப்பு..!

2)திருகோணமலையில் இன்று(17/09/2023) சிங்கள குண்டர்களால் தாக்கப்பட்ட எதிர்பு இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியது.

இந்த இரண்டு இடங்களிலும் தியாகி திலிபனின் ஊர்திக்கு எதிர்ப்பு காட்டிய அக்கரைப்பற்று இஷ்லாமிய கும்பல்களுக்கும், திருகோணமலை சிங்கள குண்டர்களுக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது இரண்டு குழுக்களும் சிங்ககொடியை கையில் பிடித்தே இதனை செய்தனர்.

வாள் ஏந்திய சிங்க கொடி தமிழர்களுக்கான அடையாளம் இல்லை என்பதை இரண்டு தரப்பும் இதன் மூலம் வெளிக்காட்டியுள்ளனர்.

அகிம்சை போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த ஒரு தமிழனின் தியாகத்தை மதிக்காத அக்கரைப்பற்று இஷ்லாமிய கும்பல்களும்,
திருகோணமலை சிங்கள குண்டர்களும் ஒன்றை உணர்ந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறான எதிர்புகளால் தமிழ்தேசியம் இன்னும் கூர்மை பெறும் அது இறுதி இலக்கை அடையும்வரை பணி தொடர்த்துகொண்டே இருக்கும்…!

-பா.அரியநேத்திரன்-
17/09/2023