பெரியநீலாவணை NEXT STEP அமைப்பின் மனிதநேயப்பணி!

பெரிய நீலாவணை நெக்ஸ்ட் ஸ்ரெப் அமைப்பினரால் நேற்றைய தினம் விசேட தேவையுடையோர்கள் 20 பேருக்கு உளவள ஆலோசனைகளும் சில உலர் உணவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

நெக்ஸ்ட் ஸ்ரெப் சமூக அமைப்பின் தலைவர் ந. சௌவியதாசன் தலைமையில் பெரிய நீலாவணை கமு/ விஷ்ணு மஹா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் மைண்ட் ஆப் பீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் A.B. இக்ரம் மற்றும் நெக்ஸ்ட் ஸ்ரெப் அமைப்பின் சிரஸ்ட ஆலோசகர் ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் கண. வரதராஜன் பாடசாலை அதிபர் எஸ். சுதர்சன், நெக்ஸ்ட் ஸ்ரெப் இளைஞர் அமைப்பின் உப தலைவர் V.சீனுஜன். அபிவிருத்தி உத்தியோகத்தர்
K. கஜேந்திரன். நெக்ஸ் ஸ்ரெப் செயலாளர் V. கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மைண்ட் ஆப் பீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களால் நிகழ்வில் கலந்து கொண்ட விசேட தேவையுடையோருக்கு உளவள ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வுக்கான நிதி அனுசரணையை கட்டாரில் தொழில்புரியும் பெரியநீலாவணையை சேர்ந்த S. விஜயகுமார் மற்றும் வேலுசாமி லலித் குமார் (கம்பொல)ஆகியோர் வழங்கி இருந்தனர்.