சென்றல் பினான்ஸ் ஊழியர்க்ளால் 15 இலட்சம் பெறுமதியான வீடு கல்முனையில் கையளிப்பு!

-புவிராஜா-

சென்ரல் பினான்ஸ் (பிராந்தியம் 08) ஊழியர்களின் நிதிப் பங்களிப்பில் கல்முனை வடக்கு பிரதேச செயலத்திற்குட்பட்ட வறுமைக்கோட்டில் வாழும் பெண் தலமை தாங்கும் குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார வீடு நிர்மாணித்து வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலகத்தின் வழிகாட்டலில் சுமார் 15 லட்சம் பெறுமதியான இந்த வீடு கல்முனை 2 ஐ சேர்ந்த நந்தினி எனும் பெண் தலமை தாங்கும் பயனாளியின் குடும்பத்திடம் நேற்று (07) கையளிக்கப்பட்டது.

சென்ரல் பினான்ஸ் கல்முனை கிளை முகாமையாளர் ஜெ. அனோஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ், ஆகியோரும் கல்முனை இராணுவ முகாம் கட்டளை அதிகாரி உதித்த களுவாராச்சி, மற்றும் சென்ரல் பினான்ஸ் வடக்கு கிழக்கு பிராந்திய முகாமையாளர் பாலசுந்தரம் கமலநாதன், முன்னாள் பிராந்திய விற்பனை முகாமையாளர் ஆறுமுகம் ஸ்ரீதர், பிராந்திய விற்பனை முகாமையாளர் பிரதீப் பத்மராசா, பிராந்திய அறவீட்டு முகாமையாளர் அன்ரனி சிவராசா, பொத்துவில் கிளை முகாமையாளர் நிறோன் பிரசாத் அம்பாறை கிளை முகாமையாளர் லக்மால் ஆகியோரும் கல்முனை வடக்கு பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஸ்ரீரங்கன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
இது போன்ற பல சமூக நல திட்டங்களை சென்ட்ரல் பைனான்ஸ் கம்பெனி நிறுவனத்தினர் எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்…