கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவ பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனாபிலாக்ஸிஸ் முகாமைத்துவம் (Anaphylaxis management) சம்பந்தமான பயிற்சி பட்டறை ஒன்று இடம் பெற்றது.

இந்நிகழ்வானது சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக இடம் பெற்ற இந்நிகழ்வில் வளவாளராக மயக்க மருந்து நிபுணர் Dr.K.சுதீஸ்வரி அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr. இரா முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் 26 ஆம் திகதி இடம் பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

You missed