செப் 15 ற்குள் மாகாண சபை தேர்தலுக்கான திகதி?

செயல் இழந்துள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான திகதியை எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் முன்னாள் தலைவரும் தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பழைய முறையில் அல்லது 2018 ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்து அதன் பிரகாரம் தேர்தலை நடத்த வேண்டும்.

எதிர்வரும் செப்டம்பர் 15க்கு முன்பாக உள்ளாட்சி மன்றத் தேர்தல் அல்லது மாகாண சபை தேர்தல் ஏதாவது ஒன்றை நடத்துவதற்குரிய திகதி தொடர்பான இறுதி முடிவை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.