உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தால் மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந் நிகழ்வு சங்கத்தின் தலைவர் எழுத்தாளர்.உமா வரதராஜன் அவர்களின் தலைமையில், பாண்டிருப்பு ஆயுர் வேத வைத்தியசாலையில் இன்று 05..06.2023 ஆந் திகதி பழமரக் கன்றுகளை நட்டதுடன் இச் சங்கத்தினால் நடாத்தப்பட்டுவரும் நூலகத்தினைக் குறிக்கும் பெயர்ப் பலகையும் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கான மரக் கன்றுகளை கல்முனை சென்றல் பினான்ஸ் கம்பனி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.