கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமனம் பெற்றுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தனது சேவைக் காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து எண்ணற்ற சேவைகளை மக்களுக்குச் செய்ய வாழ்த்துத் தெரிவிப்பதாக கமல்ஹாசன் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கு நன்றி தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கமல்ஹாசனை கிழக்கு மாகாணத்திற்கு வருகை தருமாறும் அழைப்பும் விடுத்துள்ளார்.

You missed