எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

விலை சீர்திருத்தத்தினால் பெரும்பாலான மீள் நிரப்பு நிலையங்கள் தமது எரிபொருள் தேவைக்கான முன்பதிவுகளைச் செய்யவில்லையெனச் சங்கத்தின் துணை செயலாளர் கபில தெரிவித்துள்ளார்.

முன் பதிவுகளைச் செய்யாததால் அவர்கள் தேவையான புதிய எரிபொருள்களைப் பெற்ற கொள்ளவில்லை.

அதனால் இப்போது நாட்டில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு தோன்றியுள்ளது.