கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் சமுர்த்தி அபிமானி சித்திரை புத்தாண்டு சந்தையும், கண்காட்சியும் பிரதேச செயலாளர் அதிசயராஜ் தலைமையில் கல்முனை தமிழர் கலாசார வளாகத்தில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைபீட சிரேஷ்ட முகாமையாளர் இதயராஜா,சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீநாதன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற வர்த்தக நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சப்ராஸ் கலந்து கொண்டார்.

அத்துடன் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி தலைமை காரியாலய உத்தியோகஸ்தர்கள், பிரதேச சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.