கல்முனை தமிழர் கலாசார பேரவையினுடைய வளாகத்தில் பேரவையினுடைய கட்டிடம் அமையவிருக்கின்ற மாதிரி உருவப்படத்துடன் கூடிய பேரவையினுடைய பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்கின்ற நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு T.J அதிசயராஜ் மற்றும் அம்பாறை மாவட்ட சமுத்திப் பணிப்பாளர் ஜனாப் சப்ராஸ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு பெயர்ப் பலகையினை திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வு பேரவையினுடைய தலைவர் திரு. விநாயகம்பிள்ளை செயலாளர் திரு. சுப்பிரமணியம் பொருளாளர் திரு. இதயராஜா உப தலைவர் திரு. நடேசன் உபசெயலாளர் திரு. பிரதீபன் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடைய பங்குபற்றுதலோடு மிகவும் சிறப்பாக விமர்சையாக இடம்பெற்றது.

இதற்கான நிதியினை UK வீரக்குட்டி & பொன்னம்பலம் அறக்கட்டளையைச் சேர்ந்த திரு.K.P சங்கர் அவர்கள் வழங்கியிருந்தார்.