மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (15) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விச் செயலாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 9, 10 மற்றும் 11ஆம் தரங்களுக்கான, தவணைப் பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த பரீட்சைகள் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்வித் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You missed