அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாக பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

செராண்டிப் மற்றும் பிரைமா மாவு நிறுவனங்கள் இன்று முதல் தமது கோதுமை மா உற்பத்திப் பொருட்களின் விலை கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவினால் குறைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் விளைவாக இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களின் மொத்த விலையில் சுமார் 10% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் சீனி, பருப்பு மற்றும் வெங்காயத்தின் மொத்த விலைகள் ஒரு கிலோகிராம் 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

450 கிராம் பாண் ஒன்றின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

450 கிராம் பாணின் விலை பத்து ரூபாவால் குறைக்கப்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117