படங்கள் – க. குணராசா

கல்முனை மாநகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் முத்து சப்பறபவனியும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்புற நடைபெற்றது.

தரவை சித்தி விநாயகப் பெருமான் தேரில் வீதி உலா வந்த பொழுது, யானைகளும் பவனி வந்த காட்சி பிரதேச மக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது.

மயில் நடனம்,கோலாட்டம், சிங்கள யுவதிகளின் அபிநய ஆட்டங்களுடன் விநாயகப் பெருமான் நேற்று வீதி உலா வந்தார்.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று மாசி மக நட்சத்திர தினத்தில், தீர்த்தோற்சவம் நடைபெற்று, நாளை செவ்வாய்க்கிழமை விநாயக மடை பூஜையுடன் கொடி இறக்கப்பட்டு வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

கல்முனை மாநகரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமும் முத்து சப்பறபவனியும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்புற நடைபெற்றது.

தரவை சித்தி விநாயகப் பெருமான் தேரில் வீதி உலா வந்த பொழுது, யானைகளும் பவனி வந்த காட்சி பிரதேச மக்களை மிகவும் கவர்ந்ததாக இருந்தது.

மயில் நடனம்,கோலாட்டம், சிங்கள யுவதிகளின் அபிநய ஆட்டங்களுடன் விநாயகப் பெருமான் நேற்று வீதி உலா வந்தார்.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இன்று மாசி மக நட்சத்திர தினத்தில், தீர்த்தோற்சவம் நடைபெற்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை விநாயக மடை பூஜையுடன் கொடி இறக்கப்பட்டு வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெற்றது.