பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் இன்று சொகுசு வாகனத்தில் வைத்து நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காலை 08.00 மணிக்குப் பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனத்திற்குள் உயிரிழந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.