மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் பல வருடங்களின் பின்னர் மீண்டும்  பரபரப்பாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய விமானங்கள் மத்தள விமான நிலையத்தை நோக்கி தமது செயற்பாடுகளை இயக்கியுள்ளமையே அதற்கு முக்கிய காரணமாகும்.

கடந்த சில நாட்களாக ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான ‘ரெட் விங்ஸ்’ மற்றும் ஏனைய ரஷ்ய விமானங்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை 800 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.