உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இன்றைய தினம் அவர்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரியே எழுத்து மூல கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.