பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

இலங்கை படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு செப்டெம்பர் வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவில் அதிதியாக கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பிய போது செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

200 மில்லியன் டொலர் கடன்

2021இல் பெற்றுக் கொண்ட இந்த 200 மில்லியன் டொலர் கடனை கடந்த மார்ச் மாதம் இலங்கை திருப்பிச் செலுத்தியிருக்க வேண்டும்.

எனினும் இலங்கை மேலும் கால அவகாசம் கோரியதை அடுத்தே பங்களாதேஷ் வங்கி இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117