அவுஸ்திரேலிய, கனேடிய பிரதமர்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
நன்றி – தமிழன் செய்தி
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் சாத்தியமில்லை என அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய பிரதமர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனேடியப் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் கன்பெராவில் கூட்டாகச் செய்தியாளர்களை சந்தித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் திறனை முழுமையாக இழக்கும் வரை முறையான போர்நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியாது.
தற்போது போர் வியாபித்து வருவதை நாம் காண்கிறோம்.
பொதுமக்கள் மற்றும் பொதுக் கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
இவை போர்நிறுத்தத்திற்கு அவசியமான நிபந்தனைகளாகும் என அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய பிரதமர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது சனிக்கிழமை முதல் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இரு நாடுகளும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.

