லிட்ரோ எரிவாயுவின் விலை அண்மையில் குறைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வழங்கப்பட்டுள்ள எண்

அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது மாவட்டத்தில் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை தொடர்பான தகவலை அறிந்து கொள்ள 1345 என்ற வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You missed