அபு அலா –

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளவும், அதேபோன்று தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (03) குறித்த அமைச்சின் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விடயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கலாம் என்றார்.

இந்நிகழ்வில், அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன், திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (திருமதி) எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.