கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் நியமனம்!

அபு அலா

கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக எம்.கோபாலரெத்தினம் கிழக்கு மாகாண அளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் ஆகிய உயரதிகாரிகளுக்கான 2023 ஆம் ஆண்டின் புதுவருட சந்திப்பும், இவ்வாண்டின் வேலைத்திட்ட செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (02) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் அளுநர் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபை செயலகத்தின் செயலாளராக கடமையாற்றிய வந்த எம்.வை.சலீம் கடந்த 31.12.2022 ஆம் திகதி ஓய்வுநிலைக்குச் சென்றதையடுத்து ஏற்பட்ட இந்த வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவியும் வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கலந்துரையாடலில் மாகாண அமைச்சுக்களின் செயலாயளர்கள், உதவிச் செயலாளர்கள், மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள் மற்றும் ஆணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.