55 ரூபாவுக்கும் அதிகமான விலைக்கு முட்டையை கொள்வனவு செய்ய வேண்டாம் என அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கம் பொதுமக்களை கோரியுள்ளது.

அகில இலங்கை கோழி இறைச்சி வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.அதிக விலைக்கொடுத்து முட்டையை சில்லறை வர்த்தகர்களிடம் கொள்வனவு செய்ய வேண்டாம்.49 முதல் 50 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் முட்டையை விநியோகிக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.