கல்முனை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற ஒளி விழா!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஒளி விழா நிகழ்வானது 10.12.2022 அன்று வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் வைத்தியசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை எய்ம் தேவாலய அருட்தந்தை. ரமேஸ் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் ஓய்வுபெற்ற மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி கிறீஸ் நவரெட்ணராஜா பிரதம அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது சிறுவர்களுக்கான நிகழ்வுகளில் நத்தார் தாத்தா கலந்து சிறப்பித்தார். இங்கு வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள்,வைத்திய அதிகாரிகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் பங்குபற்றினர். அத்துடன் ஒவ்வொரு விடுதிகளுக்கும் நத்தார் தாத்தா சென்று சிறுவர்களையும் நோயாளர்களையும் மகிழ்வூட்டியதுடன் பரிசுப் பொருட்களையூம் வழங்கினார்.