கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் இடம்பெற்ற நோய் தடுப்பு பயிற்சி பட்டறை!

கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் நிணநீர் தேக்க வீக்க முகாமைத்துவம் மற்றும் யானைக்கால் நோய் ஏற்படாமல் தடுத்தல் சம்பந்தமான பயிற்சி நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக Dr. முரளி வள்ளிபுரநாதன் consultant community physician – Anti filariasis campagn, சத்திர சிகிச்சை நிபுணர் Dr.சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது நிணநீர் தேக்க வீக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது இந்நிலை எவ்வாறு ஏற்படாமல் தடுப்பது இந்நிலை ஏற்பட்டால் எவ்வாறு பராமரிப்பு வழங்க வேண்டும் இந்நோய் நிலையின் போது செய்யப்படும் சத்திர சிகிச்சைகள் பற்றிய தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.