எருமை மாடுகள் கூட்டத்தின் மீது அக்டோபர் 6ஆம் தேதி மோதிய ‘வந்தே பாரத் ரயில்’ ஒன்றின் முகப்பு பகுதி பகுதியளவு சேதமடைந்துள்ளது.

இந்தியாவின் அதிகவேக ரயில்களில் குறிப்பித்தக்க வந்தே பாரத் அதி நவீன வசதிகளை கொண்டது.

இந்த ரயில் மும்பை மற்றும் காந்திநகர் இடையே இயக்கப்பட்டு வருகிறது.கடந்த செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி இந்த ரயிலை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது.