தடை

இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து இயற்கை உரமாக அதனை விற்கும் செயற்பாட்டில் சிலர் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் எதிர்வரும் 2022/23 பயிர்ச்செய்கைப் பருவத்தில் 70 வீதம் இரசாயனப் பசளையும், 30 வீதம் இயற்கைப் பசளையும் கலந்து பயிரிடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

தரமான பசளை

எனினும் கடந்த காலங்களைப் போன்று இயற்கை உரம் என்ற பெயரில் இம்முறையும் குளங்களின் வண்டல் மண்ணையும் அசுத்த கழிவுகளையும் விவசாயிகளின் தலையில் கட்ட யாருக்கும் அனுமதியளிக்கப் போவதில்லை என்று கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக தரமான இயற்கைப் பசளை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.