பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கான வாண்மை வருத்தி ஒருநாள் செயலமர்வு (17) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

மாகாணப் பணிப்பாளர் (திருமதி) சரண்யா சுதர்சன் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு தென்கிழக்கு பல்கலைக்கழக தொழித்துறை முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி ஏ.எப்.எம்.அஸ்ரப், ஓய்வுபெற்ற அதிபரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான திருமலை நவம், கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார சார்ப்புலம் பேராசிரியர் பாலசுகுமார் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு கவிதை இலக்கியத்தின் பண்புகள் மற்றும் வடிவங்கள் பற்றியும், இலக்கியமும் இளையோரும், படைப்பாளிகளின் எல்லை விரிவாக்கம், கூத்து மற்றும் நாடக பிரத்தியாக்கத்தின் செயல்நெறி போன்ற தலைப்புக்களில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

இச்செயலமர்வில் பல்துறை சார்ந்த 50 இற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர்.