இலக்கியவியலாளர் “இராகி” இரா.கிருஷ்ணபிள்ளை காலமானார்.

இலக்கிய உலகில் “இராகி” என அறியப்பட்ட ஓய்வு நிலை அதிபர் இரா.கிருஷ்ணபிள்ளை காரைதீவில் 84 வயதில் இன்று காலமானார். நாளை 21 ஆம் திகதி இறுதிக் கிரியை காரைதீவில் இடம் பெறும்.

பாண்டிருப்பை பிறப்பிடமாகக் கொண்ட இவர் காரைதீவில் வசிப்பிடமாகக் கொண்டவர்.

காரைதீவின் கலை கலாச்சாரங்களுடன் ஒன்றித்து பணியாற்றிய ஆசிரியராவார்.

ஆசிரியராக கடமையாற்றியவேளை மாணவர்களுக்கு கலை நயனத்துடன் பாடங்களை புகட்டும் ஓர் தனிச்சிறப்பு கொண்டவர்.
அர்ப்பணிப்பான ஆசிரிய சேவையுடன், பாடசாலை வளர்ச்சி கலை நிகழ்வுகள் என்வற்றிற்கு மெருகூட்டியவர்.
எழுத்தாளரான இவர் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்.

பல சிறப்பம்சங்கள் கொண்டு வாழ்ந்த பெருமகன்
இறந்த செய்தி இலக்கிய படைப்பிலும் ,நாடகம் , கோலாட்டம் போன்ற துறைகளிலும் வெற்றிடத்தையும் இழப்பையும் உண்டுபண்ணியுள்ளது .