கொலம்பியாவில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் பொலிஸார் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக கொலம்பிய ஜனாதிபதி Gustavo Petro தெரிவித்துள்ளார்.

கொலம்பியாவின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதியாக கடந்த மாதம் Gustavo Petro பொறுப்பேற்றதன் பின்னர், பொதுப் பாதுகாப்புப் படைகள் மீது நடத்தப்பட்ட மிகவும் கடுமையான தாக்குதல் இதுவாகும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.