தற்போது பொருளாதார நெருக்கடி மற்றும் அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பதுளை மாவட்டத்தின் லுணுகலை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுல்சீம தோட்டக்குடியிருப்பில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த 110 விதவைகள் குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

இதில் கிராம சேவகர், சமுர்த்தி உத்தியோகத்தர், தோட்ட நல அதிகாரி, அபிவிருத்தி உத்தியோகத்தர், வலயக் கல்வி அலுவலகம் ஆலோசகர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.

இதற்காக பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் வெளிநாட்டு திட்டச் செயலாளர் எஸ்.பாலசிங்கம் அவர்களின் தலைமையில் மலையகத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதற்குரிய நிதி அனுசரணை செய்துவருகின்றனர்.

இதனை New Sun Star Youth Club மற்றும் Friendly Ship Foundation இணைந்து ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.