கண்டி – மாத்தளை பிரதான வீதியில் அக்குறணை 7ஆம் மைல் கட்டைக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று காரை முந்திச் செல்ல முற்பட்டு லொறி ஒன்றுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

எதிரே வந்த லொறி மீது மோட்டார் சைக்கிள் மோதி பின்னர் அவர் காரின் சில்லில் சிக்கியுள்ளார்.

அப்போது அப்பகுதி மக்கள் சேர்ந்து காரை தூக்கி மோட்டார் சைக்கிளில் வந்தவரை மீட்டனர்.

பலத்த காயம் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.