(சுதா)

ஈழமணித் திருநாட்டின் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புடையதும் தொண்மை வாய்ந்ததுமான மகா துறவி சுவாமி ஓங்காரானந்த சரஸ்வதி அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா எதிர்வரும் (17) புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

முதல் எட்டு நாட்களும் திருவிழாக்கள் நடைபெற்று, ஒன்பதாம் நாளாகிய 25.08.2022 வியாழக்கிழமையன்று பி.ப 3 மணியளவில் தேர்த்திருவிழாவும் பத்தாம் நாளாகிய 26.08.2022 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு வங்கக் கடலில் சமுத்திர தீர்த்தோற்சவமும் இடம்பெற்று இவ்வாண்டிற்கான மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

இலங்கைத் திருநாட்டில் ஆகம முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயங்களில் தமிழ் மொழியில் மாத்திரம் வேத பாராயணங்கள் ஓதப்பட்டு முருகப்பெருமானிற்கு பூசை வழிபாடுகள் இடம்பெறும் ஒரேயொரு ஆலயமாக இவ்வாலயம் திகழ்வதும் குறிப்பிடத்தக்கது.

Hi