தாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவ கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இறுதி கட்ட அரசியல் செயற்பாடுகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதுமுக உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர்கள் உரிய வகையில் நாட்டின் நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.