இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இந்த தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது ஜெனிவா தீர்மானங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதோடு, அவை தொடர்பில் செயற்படுவதற்கு நிபுணர் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த புதிய ஜெனிவா தீர்மானத்திற்கு பிரித்தானியா உட்பட ஐந்து நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

2015ம் ஆண்டு அமெரிக்கா இலங்கைக்கு எதிரான 30/1 ஜெனிவா தீர்மானத்தை முன்வைத்ததுடன் அதற்கு இலங்கை ஒப்புக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You missed