நேற்றைய தினம்(02) டீசல் கப்பல் ஒன்றுக்கான கட்டணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த டீசல் தொகையை தறையிறக்கும் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதேபோல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு வருட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் முதலாவது கப்பல் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 12 மற்றும் 14 ஆம் திகதிகளுக்கு இடையில் நாட்டை வந்தடையவுள்ளது.

மேலும், ஒரு பெற்றோல் மற்றும் டீசல் கப்பல்களுக்கான முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.