அவசரத்துக்கு கல்முனை ஆதாரவைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் வழங்கிய மட். கோவில்குளம் IOC!

நேற்று முன்தினம் தினம் (27.07.2022) எமது இணையதளத்தில் கல்முனை ஆதார வைத்தியசாலை ஜெனறேற்றர் இயந்திரத்திற்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்கொள்வதனால் மின்வெட்டு நேரங்களில் நோயாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உட்படுவதோடு வைத்தியசாலை அன்றாட செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது சவாலானதொரு விடியமாக உள்ளதாக செய்தி ஒன்றினை பதிவு செய்திருந்தோம். இதன் விளைவாக மட்டக்களப்பு கோவில்குளம் 10C எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் திரு. சுரேஷ் அவர்கள் தானாகவே முன்வந்து வைத்தியசாலை உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு தனது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் வழங்கப்படும் நாட்களில் தன்னால் முடிந்த அளவு டீசலினை வைத்தியசாலை தேவைக்கு வழங்குவதாக உறுதியளித்தார்.
இதன் பிரகாரம் இன்று (28.07.2022) திரு. சுரேஷ் அவர்களது நல்லெண்ணத்தின் காரணமாக டீசல் கிடைக்கப்பெற்றது. கடந்த காலங்களிலும் படுவான்கரை விவசாயிகளுக்கு அறுவடைக்கு தேவையான எரிபொருளை வழங்கியதில் இவரது பெரும் பங்கு காணப்படுகின்றது. சுயநலமான அவசர உலகில் இன்று எரிபொருள் பேசும் பொருளாய் மாறியுள்ள எம் நாட்டில் இப்படியும் பெரும் மனம் படைத்தவர்கள் இருப்பதில் பூரிப்படைகின்றது. எமது செய்திச் சேவை, உங்களுக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் ஐயா…!

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஜெனரேட்டருக்கு எரிபொருள் இல்லாததால் வைத்தியசாலை பாரிய அபாய நிலையை எதிர்கொண்டுள்ளது.
மின்சாரம் தடைப்டும் போது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் உயிராபத்தைக்கூட எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

கல்முனை ஆதரவைத்தியசாலையின் ஜெனரேற்றருக்கு கல்முனையில் உள்ள எரிபொருள் நிலையங்களில் இருந்து எரிபொருள் கிடைக்காத நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோவில் குளம் IOC எரிபொருள் நிலைப்பு நிலைய உரிமையாளர் முன் வந்து எரிபொருள் வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் முன் வந்து அங்குள்ள வைத்தியசாலைகளின் ஜெனரேற்ரர்களுக்கும் எரி பொருள் வழங்கியிருந்தார்கள்.

கல்முனையில் இந்த வைத்தியசாலையின் நிலையை கருதிக் கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் விசேட ஏற்பாடுகளை செய்து தாமதியாது எரிபொருள் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனமக்கள் கோரிக்கையை முன்வைக்கின்றனர்.