கல்முனையில் இருந்து தினமும் கதிர்காமத்திற்கு பஸ் சேவை

கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கு தினமும் பஸ் சேவை ஆரம்பமாகி இருக்கின்றது என்று கல்முனை போக்குவரத்து சாலையின் அத்தியட்சகர் பி.ஜெளபர் தெரிவித்துள்ளார்.
ஒரு வழிப்பாதை பயணத்திற்கான கட்டணம் 1550 ரூபா. முற்பதிவுக்கு 30 ரூபா. காலையிலே ஆறு மணி, ஏழு மணிக்கு இரண்டு பஸ்கள் புறப்படுகின்றன.
அதேபோன்று கதிர்காமத்திலிருந்து காலை 8 மணிக்கு ஒரு பஸ் புறப்படுகின்றது.
இதேவேளை உகந்தை மலை . .. ஆலயத்திற்கான பஸ் சேவை தினமும் நடைபெற்று வருகின்றது. அதற்கான பஸ் கட்டணம் 1025 ரூபா.
40 பேர் சேர்ந்து தனியாக ஒரு விசேட பஸ் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
கதிர்காமத்தில் போக்குவரத்து சபைக்கான முன்பதிவு காரியாலயம் இயங்கத் தொடங்கி இருக்கின்றது.