கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஜெனரேற்றருக்கு எரி பொருள் இல்லை – நோயாளிகள் பாரிய அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை!

கல்முனை ஆதார வைத்திய சாலையில் மின் தடைப்படும் நேரங்களில் பயன்படுத்தும் ஜெனரேற்றறுக்கு எரிபொருள் (டீசல்) கிடைக்காததால் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்கள் பாரிய அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்கள். இது உயிராபத்தை கூட ஏற்படுத்தும் நிலைமையாகும்.

இதற்கான எரிபொருளை பெறுவதற்காக கல்முனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் முயற்சி செய்த போதும் எரிபொருள் இதுவரை கிடைக்கவில்லை என அறிய முடிகிறது.

இது ஒரு பாரிய அபாயமான நிலைமையாகும் வைத்தியசாலையில் இருக்கும் நோயாளிகள் மாத்திரமல்ல நமது வீட்டில் இருந்தும் ஒரு நோயாளி வைத்தியசாலை செல்லலாம் அவ்வாறு சிந்தித்தால் அதன் வலி புரியும். ஆகவே கல்முனை ஆதார வைத்திய சாலைக்கு அவசரமாக எரிபொருளை பெற்று கொடுப்பதற்கு உரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் முடியுமானவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117