தற்போது பரவி வரும் புதிய வகையான வைரஸை கண்டுபிடிப்பதற்கு மிகவும் சிரமம் என்பதாலும், உயிருக்கு ஆபத்து என்பதாலும் மக்கள் அவசியம் முக கவசங்களை அணிய வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது டெல்டா வைரசை விட ஐந்து மடங்கு சக்தி வாய்ந்ததாகும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகின் மேல் பகுதியில் வலி, நிமோனியா என்பன இதன் அறிகுறிகளாகும்.

குறுகிய காலத்திற்குள் இந்த நோயின் தாக்கம் தீவிரமடையும் என அந்த வைத்தியர்.

இந்த விடயத்தில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடங்களை தவிர்க்குமாறும், முகக் கவசங்களை அணிந்து அடிக்கடி கைகளை கழுவிக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.