ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு பிரிவினர் அதிகளவில் திடீரென நுழைந்துள்ளமையினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோட்டா கோ கம போராட்டக்காரர்களையும் அங்கிருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் போது அங்கு படையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இராணுவம் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.