இந்தியாவின் ஆசியுடன் TNA டலஸ்க்கு ஆதரவு? நேற்று கூட்டத்தில் நடந்தது என்ன?

இன்று பரபரப்பாக இடம் பெற உள்ள ஜனாதிபதி தெரிவுக்கு கட்சிகள் ஆதரவு தொடர்பாக முடிவெடுக்கும் கூட்டங்கள் நேற்று இடம் பெற்றிருந்தன.

த. தே. கூட்டமைப்பு நேற்று இரா சம்பந்தன் தலைமையில் பங்காளி கட்சிகள் கூடி நீண்ட விவாதம் ஆராய்வுகள் பின்னர் சஜித் டலஸ் அணியினருக்கு ஆதரவளிப்பதென முடிவெடுத்திருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் போது சம்பந்தன் சுமந்திரன் சாணக்கியன் ஆகியோரைத் தவிர ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டலசுக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் தங்கள் அதிருப்தியை தெரிவித்துடன் நடுநிலையாக இருக்கலாம் எனவும் கூறியிருந்தனர்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு ஏற்படுத்தி இந்தியாவின் விருப்பம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலசை ஆதரிக்க வேண்டும் என்பதை அவர் வாயால் தொலைபேசி ஊடாக வெளிப்படையாக கூற செய்ததன் பின்னர் ஏனைய TNA எம். பிக்கள் சம்மதித்ததாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் காலைக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது