செல்லையா பேரின்பராசா
பிரபல சோதிடரும், இலக்கிய வித்தகருமான ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் கலைமாறன் செ.லோகராசா எழுதிய ” சாதகத்தில் ஆயுள் ஆரோக்கியம் ” எனும் சோதிட ஆராய்ச்சி நூல் வெளியீட்டு விழாவும், “வாழ்க்கையில் முகிழ்ப்பதே இலக்கியம் ” எனும் இலக்கியத் திறனாய்வு நூலின் அறிமுக விழாவும் நாளை ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 02.45 மணிக்கு சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தில் இடம்பெறவுள்ளது.
இலக்கியவியலாளரும் ஓய்வு நிலை அதிபருமான கலாபூஷணம் இரா. இரத்தினசிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வில் சேனையூர் அனாமிகா பண்பாட்டு மையத்தின் நிறுவுனர் பேராசிரியர் பால சுகுமார் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார். இந் நூல்கள் பற்றிய அறிமுகவுரையினை ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் கலாபூஷணம் பாவலர் ப.மதிபாலசிங்கமும் , இந் நூல்கள் பற்றிய நயவுரைகளை ஓய்வு பெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் க. வெறிவேல், அதிபர் த.தயாளன் ஆகியோரும், நூலாசிரியர் பற்றிய உரையை சேனையூர் மத்திய கல்லூரி அதிபர் சோ.பாக்கியேஸ்வரனும் நிகழ்த்தவுள்ளனர்.
