கடந்த ஜுலை 09ஆம் திகதி கோட்டை ஜனாதிபதி மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்ட போது முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் ஜனாதிபதி மாளிகையின் அறையொன்றில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவதை தடுப்பதற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய பாதுகாப்பு வேலியை உடைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்த போது வெளிவிவகார அமைச்சு பக்கத்தில் அமைந்திருந்த வாயிலாக பசில் ராஜபக்ஷ வெளியேறியதாகத் தெரியவந்துள்ளது. அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்புதான் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ளனர்.

பாதுகாப்புச் செயலாளரும் முப்படைத் தளபதிகளும், பொலிஸ் மா அதிபரும் ஜனாதிபதி மாளிகையின் செயற்பாட்டு அறையில் இறுதித் தருணம் வரை பாதுகாப்புப் படையினரை வழிநடத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மாளிகையின் இரண்டாவது மாடியில் இருந்த கோட்டபாய ராஜபக்ச, பாதுகாப்பாக கடற்படைத் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கிருந்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் ரணபாகு கப்பலின் மூலம் திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.

You missed