( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர்  மருத்துவர் குணசிங்கம் சுகுணன்  தனக்கு ஏற்பட்ட விபத்தின் பின்னர் 21 நாட்களுக்கு பிற்பாடு இன்று(24)திங்கட்கிழமை கடமைக்கு திரும்பினார்.

கடமைக்கு திரும்பிய அவருக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினர் இந்து மற்றும் இஸ்லாமிய சமய வழிபாடுளை செய்தனர்.

வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் பி. ஸ்ரீசங்கர் தலைமையில் சமய  வழிபாடுகளுடன் நிகழ்வு இடம்பெற்றது.

 முதலில், வைத்தியசாலை வளாகத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடும் பூஜையும் இடம்பெற்றது.

அடுத்து, அங்குள்ள பள்ளிவாசலில் அவருக்கு விசேட வழிபாடும்  துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அதன் பின்னர் ஒன்றுகூடல்  மண்டபத்திலே ஒரு கூட்டம் இடம்பெற்றது.

அதில், விபத்தின் பின்னர் இதுவரை இடம்பெற்ற  வைத்தியசாலை சீருடை சர்ச்சை தனது வகிபாகம் போன்ற விபரத்தை தொகுத்து உரையாற்றினார்.