( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய புதிய அலங்கார சித்திரத்தேர் அமைப்பதற்கான ஆரம்ப விழா நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை ஆலய பரிபாலன சபையின் தலைவர் இ.மேகராசா (அதிபர் ) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம் பெற்றன .
கோவில்போரதீவைச் சேர்ந்த லண்டனில் வாழும் திரு திருமதி மார்க்கண்டு நேசராசா தம்பதியினரின் அனுசரணையில் இந்த புதிய சித்திரத்தேர் உருவாகின்றது .
திருகோணமலை கமலாலயம் கலைக்கூட ஸ்தபதி விஸ்வ பிரம்மஸ்ரீ கே. சந்திரமோகன் தலைமையிலான குழுவினர் வடிவமைக்கின்றார்கள் .
ஆரம்ப விழாவில் பிரதேச செயலாளர் என்.ரங்கநாதன், முன்னாள் தவிசாளரும் அதிபருமான சிவ.அகிலேஸ்வரன், ஆலய பரிபாலன சபையினர் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.










