உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையின் 5வது போட்டியில் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சம்பியன்
உலகத் தமிழர் சதுரங்கப் பேரவையினால் கடந்த 22ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்பட்ட 5ஆவது திறந்த (Open Category) சதுரங்கப் போட்டியில், கமு. கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை மாணவன் செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சிறப்பாக விளையாடி, தனது வயது பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இப்போட்டியில் மொத்தம் 7 சுற்றுகளில் பங்கேற்ற செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந், 6 வெற்றிகளைப் பெற்று 6 புள்ளிகளுடன் Open Category-யில் 6ஆவது இடத்தைப் பெற்றார். போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.
இதேவேளை, தனது வயது பிரிவான 13 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்வன் பரமேஸ்வரன் கவிஷாந் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறப்பான ஆட்டத்திறன், துல்லியமான சிந்தனை மற்றும் நிதானமான அணுகுமுறையுடன் விளையாடி, தனது சதுரங்கத் திறமையை அவர் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
தனது மகனின் இந்த வெற்றிக்காக பயிற்சியளித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும், ஊக்கமும் ஆதரவும் வழங்கிய அனைவருக்கும் மாணவனின் பெற்றோர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.


