கனடாவில் வாழும் ஓந்தாச்சிமடம் மக்களின் வருடாந்த மாபெரும் ஒன்றுகூடல், 2026 08.03 ஆம் திகதி மெலிகன் ((Milliken) பூங்காவில் உற்சாகமாக நடைபெற்றது. சமூக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நூற்றுக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு, ரகு மார்ண்டு அவர்களின் தலைமையில் அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.
ஓந்தாச்சிமடம் மக்களுடன் ஏனைய பிரதேச மகட்களும் கலந்து கொண்டிருந்தனர். சமூக ஒற்றுமை, நட்பு மற்றும் உறவுப் பிணைப்பை வலுப்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
நிகழ்வில், தமிழ் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் கலைநிகழ்ச்சிகள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், உணவு விருந்தோம்பல் ஏற்பாடுகள் இடம்பெற்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்று மகிழ்ந்தனர்.
விளையாட்டுப் போட்டிகள் மிகவும் உற்சாகமான சூழலில் நடைபெற்றதுடன். வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சென்மைக்கல் கனடா தலைவர் வால் புருசோத்மன் மற்றும் கல்முனை பிராந்தியம் இணையம் கனடா அமைப்பின் தலைவர் விசு கணபதிப்பிள்ளை உட்பட பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வை வெற்றிகரமாக நடத்த பங்களித்த நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தன்னார்வத் தொண்டர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் ஓந்தாச்சிமடம் மக்கள் சார்பாக அமைப்பின் செயலாளர் விஜய் நன்றிகளை தெரிவித்தார்.
