செங்கடலில் பயணித்துக் கொண்டிருந்த சவூதி அரேபிய நிறுவனத்திற்குச் சொந்தமான ‘என்சீலியா’ (Encelia) என்ற எண்ணெய் தாங்கி கப்பல் தாக்குதலுக்கு இலக்கானதாக சவூதி அரசின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான SPA தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலின் காரணமாக கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியதாகவும், எனினும் கப்பலில் இருந்த அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக சவூதி பொதுப் போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், கப்பல், அதில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க தேவையான அவசர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவூதி அரேபியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கடல்சார் முற்றுகை நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக யேமனின் ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.