பாறுக் ஷிஹான்
இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதனை காணமுடிந்தது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து குறுகிய நெடுந்தூர சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளாது வழமை போன்று இன்று தத்தமது சேவைகளை முன்னெடுத்திருந்தது.
மேலும் அம்பாறை நகரப்பகுதியில் தனியார் பேரூந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.
பயணக் கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக போதிய பேரூந்துகள் இல்லாத காரணத்தினால் சில பாடசாலை மாணவர்கள் நீண்ட நேரம் பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தனர்.
இது தவிர நகரத்தின் மத்தியில் தனியார் பேரூந்துகளும் வீதியின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இதனால் பயணிகள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு அம்பாறை தலைமையக பொலிஸார் சென்று பாதுகாப்பினை உறுதிப்படுத்தியுள்ளனர்.




